fbpx

நீங்கள் எந்த பூத்தில் வாக்களிக்க வேண்டும்..! தேடி அலைய வேண்டாம்…! கையில் செல்போன் இருந்தாலே போதும்..!

இன்று வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்காவே பிரத்யேக App ஒன்றை அறிமுகம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்.

18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக இன்று (ஏப்ரல் 19ஆம் தேதி) தேர்தல் நடைபெற உள்ளது. இன்றைய தினம் வாக்குப்பதிவு என்பதால் இன்று தான் சிலர் எந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வேண்டும் எனத் தேடியும், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள அவஸ்தைப்படுவார்கள். அப்படி பெயர் இல்லாத பட்சத்தில் அதிகாரிகளிடம் சண்டையிட்டு வாக்குவாதத்திலும் ஈடுபடுவார்கள். இதுபோன்ற பிரச்னைகளை தடுப்பதற்காகவே voter helpline என்ற App ஒன்றை அறிமுகம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்.

இந்த ஆப்-பை செல்போனில் பதிவிறக்கம் செய்து, வாக்காளர் பெயர் மற்றும் எப்பிக் எண் (வாக்காளர் அட்டையில் உள்ள எண்) ஆகியவற்றை டைப் செய்தாலே அனைத்து தகவல்களும் வந்து விடும். அதாவது எந்த வாக்குச்சாவடியில் நாம் வாக்களிக்க வேண்டும், எந்த பள்ளியில் வாக்குச்சாவடி மையம் உள்ளது என அனைத்து தகவல்களையும் இந்த App நமக்கு பிரத்யேகமாக வழங்கிவிடும். இந்த ஆப்-பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்துமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Read More: Bitcoin மோசடி : நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.98 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!

Rupa

Next Post

Candidate: உங்க தொகுதி வேட்பாளர் பற்றி தெரிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்...?

Fri Apr 19 , 2024
மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான 18-வது மக்களவைத் தேர்தலில், முதல் கட்டமாக இன்று நடைபெறவுள்ள தேர்தலுக்கு வாக்காளர்களை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. முதல் கட்ட தேர்தல் குறித்த விவரங்கள்: இன்று 102 மக்களவைத் தொகுதிகளுக்கு (பொது – 73, எஸ்சி -18, எஸ்டி – 11) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்துடன் அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு 92 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அனைத்துக் கட்டங்களையும் […]

You May Like