fbpx

’இனி புகார் தெரிவிக்க அலைய வேண்டியதில்லை’..!! அனைத்து வீடுகளிலும் கியூஆர் கோடு..!!

கடலூர் மாநகராட்சியில் குப்பைகளை அகற்றுதல், கால்வாய் சுத்தம் செய்தல், தெருவிளக்கு எரிய வைத்தல், சாலை பராமரிப்பு, சாக்கடை சுத்தம் செய்தல், வரி செலுத்துதல் உள்ளிட்ட சேவைகளைப் பெற பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகம் வந்து புகார் தெரிவிக்க வேண்டியிருக்கும். ஆனால், தற்போது அந்த சிரமங்களை குறைக்கும் வகையில், கியூஆர் கோடு எனும் அட்டை அனைத்து வீடுகளிலும் ஒட்டப்பட உள்ளது.

கடலூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் உள்ள அனைத்து வீடுகளிலும் கியூஆர் கோடு அட்டை ஒட்டும் பணி தொடங்கப்பட உள்ளது. கடலூர் மாநகராட்சி முழுவதும் 33,000 கியூஆர் கோடு அட்டை ஒட்டும் பணியினை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா தொடங்கி வைத்தார். தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களைக் கொண்டு இப்பணி செயல்படுத்தப்பட உள்ளது.

தங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த கியூஆர் கோடு அட்டைகளை பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவித்து மாநகராட்சியின் அனைத்து சேவைகளையும் பெறலாம் என மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

யூடியூப் வீடியோ பார்க்க Ad Block யூஸ் பண்றீங்களா..? இனி அதற்கும் ஆப்பு..!! என்ன ஆச்சு தெரியுமா..?

Sat Jul 15 , 2023
நாம் கேட்பதை எல்லாம் கொடுக்கும் ஒரு செயலி தான் யூடியூப். குண்டூசி முதல் விமானம் வரை தயாரிப்பது எப்படி? உணவு வகைகள், மருந்து வகைகள் உட்கொள்வது எப்படி? செய்வது எப்படி? என யூடியூபில் கிடைக்காத தகவல்களே இல்லை. அதனால் தான் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் யூடியூப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் 45 கோடிக்கும் அதிகமான மக்கள் யூடியூப் பயன்படுத்துகிறார்கள். ஒருகாலத்தில் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே […]
யூடியூப் வீடியோ பார்க்க Ad Block யூஸ் பண்றீங்களா..? இனி அதற்கும் ஆப்பு..!! என்ன ஆச்சு தெரியுமா..?

You May Like