தனது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது..
கொரோனா பெருந்தொற்று, அதன் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஆகியவை காரணமாக பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை கொண்டு வந்தன.. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகும், பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை தொடர்ந்தன.. ஒரு சில நிறுவனங்கள், வீட்டில் இருந்து வேலை செய்வது, அலுவலகத்திற்கு சென்று வேலை செய்வது என ஹைப்ரிட் வேலை முறையை அறிமுகம் செய்தன..
இந்நிலையில் பல அலுவலகங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீஸ்) இப்போது தனது தொழிலாளர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.. அனைத்து ஊழியர்களும் நவம்பர் 15 முதல் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று டிசிஎஸ் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.