fbpx

இனி ஃபோன் நம்பரே தேவையில்லை..!! ஈசியா பணம் அனுப்ப இப்படி ஒரு வழியா..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

ஃபோன் நம்பரே இல்லாமல் டிஜிட்டல் முறையில் எப்படி பணம் அனுப்புவது என்பதை இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஷாப்பிங் மால்கள், தியேட்டர் என பெரிய வணிக வளாகங்களில் தொடங்கி சிறு, குறு கடைகள் வரை மக்களிடையே மிகப்பெரிய தேவையாகவே அமைந்திருக்கிறது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை. கூகுள் பே, போன் பே, பேடிஎம் என பல டிஜிட்டல் முறை பரிவர்த்தனை அப்ளிகேஷனை வைத்து UPI மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் செய்யப்படுகிறது. கடைக்கோடி மக்கள் வரை இந்த ஆன்லைன் பரிவர்த்தனை முறைகளை பயன்படுத்துவதால் சுலபமாக உபயோக்கிக்கும் வகையிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை செயலிகள் சார்பில் தொடர்ந்து முக்கிய அம்சங்களை கொண்ட அப்டேட்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

இனி ஃபோன் நம்பரே தேவையில்லை..!! ஈசியா பணம் அனுப்ப இப்படி ஒரு வழியா..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

அந்த வகையில், UPI மூலமும், கூகுள் பே, போன் பே மூலமும் தினசரி பயன்படுத்துவோருக்கு இந்த முக்கியமான அம்சங்கள் கண்டிப்பாக உதவும். அதன்படி, ஒருவரிடம் இருந்து QR Code அனுப்பி பணத்தை வேறு எப்படியெல்லாம் பணத்தை பெறலாம், போன் நம்பரே கொடுக்காமல் எப்படி பணம் பெறுவது என்பதை பார்க்கலாம்.

இனி ஃபோன் நம்பரே தேவையில்லை..!! ஈசியா பணம் அனுப்ப இப்படி ஒரு வழியா..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

அது எப்படி திமிங்கலம்..?

1) கூகுள் பே-ல் QR Code மூலம் எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் என்பதை செட் செய்ய முடியும். அதற்கு GPay Profile-ல் QR Code-க்குள் சென்றால் அதில் வலப்புறத்தின் மேலே உள்ள ஐகானில் Set amount என இருக்கும். அதில் எவ்வளவு பணம் வேண்டுமோ அதனை செட் கொடுத்து அதற்கான QR Code மட்டும் அனுப்ப முடியும். இதன் மூலம் தவறுதலாக கூடுதல் பணம் அனுப்புவதை தவிர்க்க முடியும்.

2) அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனை செயலிகளிலும் எத்தனை அக்கவுன்ட் வைத்திருந்தாலும் அவற்றில் ஒவ்வொன்றுக்கும் UPI ID இருக்கும். இந்த UPI ID-ஐ வைத்து பேமெண்ட் அனுப்ப முடியும். இதனை பயன்படுத்துவதால் போன் நம்பர் கொடுத்தாக வேண்டிய அவசியமோ அல்லது QR Code அனுப்ப வேண்டிய அவசியமோ இருக்காது.

3) True caller இல்லாதவர்கள் தங்களுக்கு தெரியாதவர்கள் எவரேனும் போன் செய்தால் அந்த நம்பரை காப்பி செய்து கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளில் பேஸ்ட் செய்து யார் அந்த நபர் என்பதை ஃபோட்டோவோடு பார்த்து தெரிந்துகொள்ளலாம். ஆனால் இதில், முக்கியமான ஒன்று அந்த நபர் கூகுள் பே போன்ற செயலிகளில் கணக்கு வைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

Chella

Next Post

பக்தர்கள் கவனத்திற்கு!! திருப்பதி வைகுண்ட ஏகதேச சிறப்பு தரிசனம் டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியீடு..

Thu Dec 22 , 2022
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதசியொட்டி வைகுண்ட நுழைவு வாயில் திறக்கப்பட்டு 11ம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்களில் ஏழுமலையானை வழிபடுவதற்காக வரும் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2000 பேர் என்ற எண்ணிக்கையில் இன்று சிறப்பு ஏற்பாட்டின் பேரில் 300 டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் விற்பனை செய்ய உள்ளது. இந்த தரிசனத்திற்காக ஸ்ரீவாரி அறக்கட்டளைக்கு ஒரு பக்தர் 10ஆயிரம் […]

You May Like