fbpx

‘இனி ரேஷன் கார்டு தேவையில்லை’..!! மாநிலம் முழுவதும் புதிய நடைமுறை..!! அமைச்சர் சக்கரபாணி அதிரடி..!!

ரேஷன் கடைகளில் கருவிழியை ஸ்கேன் செய்து பொருள் வாங்கி செல்லும் திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கான மின்னணு பதிவேட்டில் கைரேகை பதியும் பொழுது கோளாறுகள் ஏற்படுவதால், மின்னணு பதிவேடுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்கள் கருவிழி மூலமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இனி ரேஷன் கார்டு தேவையில்லை..!! மாநிலம் முழுவதும் புதிய நடைமுறை..!! அமைச்சர் சக்கரபாணி அதிரடி..!!

மேலும், இது சாத்தியமானால் அனைத்து ரேஷன் கடைகளிலும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், ரேஷன் கடைகளில் கருவிழியை ஸ்கேன் செய்து பொருள் வாங்கி செல்லும் திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அப்படியானால், கடைகளுக்கு ரேஷன் கார்டுகளை எடுத்து செல்ல தேவையில்லை. அங்கே உள்ள ஸ்கேனரில் கண்களை காட்டினாலே பொருட்கள் வழங்கப்படும். இந்த முறை தற்போது சோதனை முயற்சியில் இருக்கிறது.

Chella

Next Post

தொடர்ந்து Beauty Parlour-க்கு செல்பவரா நீங்கள்..? பக்கவாத நோயால் பெண் பாதிப்பு..!! என்ன காரணம் தெரியுமா?

Fri Nov 4 , 2022
ஹைதராபாத்தை சேர்ந்தவர் சீமா. 50 வயதான இவர் தொடர்ந்து பியூட்டி பார்லருக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஹேர்கட் மற்றும் முகத்தை அழகுபடுத்தி வந்துள்ளார். இந்நிலையில், இவர் வழக்கம்போல் ஹேர்கட் செய்தபோது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதும் அழகு நிலையம் செல்லும் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெண்ணுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் சுதிர் குமார் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் தற்போது இணையத்தில் வைரலாகி […]

You May Like