ஒவ்வொரு ஏடிஎம்மிலும் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியாளர்களை நியமிப்பது நடைமுறைக்கு மாறானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2013 ஆம் ஆண்டு, ஒரு நபரின் ஏடிஎம்மில் இருந்து ரூ.35,000 திருடப்பட்ட சம்பவத்தை கவுகாத்தி உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஏடிஎம்களில் பாதுகாப்பு குறித்து உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதில்,, ஒவ்வொரு ஏடிஎம் மையத்திலும் பாதுகாவலர்களை வைத்திருத்தல், சிசிடிவி கேமராக்களை எப்போதும் இயக்கத்தில் வைத்திருத்தல், ஏடிஎம் தொடர்பான தற்காலிக ஊழியர்களை சரிபார்த்தல், ஏடிஎம் மையத்தில் ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே நுழைய வேண்டும், ஏடிஎம் மையத்தில் ஹெல்மெட், மஃப்ளர் போன்ற பொருட்களால் முகத்தை மூடுவதற்கு தடை போன்ற பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டன.
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. அனைத்து ஏடிஎம் மையங்களிலும் 24 மணி நேரமும் காவலர்களை நியமிப்பது விலை உயர்ந்தது மற்றும் நடைமுறைக்கு மாறானது என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. 2016 ஆம் ஆண்டு, வங்கிகளின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இப்போது உச்ச நீதிமன்றம் அந்த இடைக்காலத் தடையை நிரந்தரமாக்கியுள்ளது.
நீதிபதிகள் பூஷன் ராமகிருஷ்ண கவாய் மற்றும் நீதிபதி கே வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் வங்கிகள் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அசாமில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்கள் இருப்பதாக அவர் கூறினார். எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் பாதுகாப்புக் காவலர்களை வைத்திருப்பது சாத்தியமில்லை. உலகம் முழுவதும் ஏடிஎம் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சிசிடிவி கண்காணிப்பு மிகவும் நடைமுறை வழி என்று கருதப்படுகிறது. வங்கிகளின் இந்த நிலைப்பாட்டை மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியும் ஆதரித்துள்ளதாக எஸ்.ஜி. துஷார் மேத்தா கூறினார். சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் வாதங்களை நீதிபதிகள் அமர்வு,கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
Readmore: இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி!. சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா இல்லை!. மாற்று வீரர் யார் தெரியுமா?