fbpx

மக்களே.. இனி கரண்ட் பில் கட்ட தேவையில்லை..! தமிழ்நாடு மின்சார வாரியம் சூப்பர் அறிவிப்பு

ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மின்சார கட்டணம் செலுத்துவதில் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு அனைத்து வீடுகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. குறிப்பாக, 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும், மேலும் கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட், விசைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கிறது.

இதற்கிடையில், மின்சாரச் செலவை மேலும் குறைக்கவும், இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் நோக்கில், “மேற்கூரை சோலார் பேனல்” என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், வீடுகளில் சோலார் பேனல் அமைக்க விரும்புபவர்களுக்கு மானியமாக ஒரு சில தொகைகள் வழங்கப்படும். உதாரணமாக, 1 கிலோ வாட் சோலார் பேனலுக்கு ரூ.30,000, 2 கிலோ வாட்டிற்கு ரூ.50,000, 3 கிலோ வாட்டிற்கு ரூ.78,000 என அரசு மானியம் வழங்குகிறது.

இந்த சோலார் பேனல் மூலம் பெறப்படும் மின்சாரம் வீடுகளில் பயன்படுத்துவதற்கும், ஏதாவது மின்சாரத் தட்டுப்பாடு நேரிட்டாலும் உபயோகப்படுத்தும் வகையில் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இது குறிப்பாக வெயில் காலங்களில் அதிகம் பயன்படும் மற்றும் மலை காலங்களில் கூட சோலார் பேனலின் மின்சார உற்பத்தி மூலம் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

இந்த திட்டத்தில் சேர விரும்புபவர்கள் அரசு இணையதளமான https://www.pmsuryaghar.gov.in அல்லது https://www.tnebltd.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் மேற்கூரை சோலார் பேனல்கள் அமைப்பதற்கு என்று வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதை பயன்படுத்தி மின்சார கட்டணம் இன்றியே வீட்டிற்கு தேவையான மின் தேவைகளை சமாளிக்க முடியும். மேற்கூரை சோலார் பேனல்கள் மூலம் மின்சார வசதி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மானியம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

1 கிவா ரூ30,000/-

2 கிவா ரூ 60,000/-

3 கிவா ரூ 78,000/- வரை மானியம் வழங்கப்படும்.

எப்படி இணைப்பை பெறுவது? மேற்கூரை சோலார் பேனல்கள் மூலம் மின்சார வசதி பெறுபவர்களை தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசு வரவேற்று வருகிறது. அதன்படி இதற்காக வழங்கப்படும் மானியம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி மேற்கூரை சூரியசக்தி மின் மூலம் 10 கிலோ வாட் வரை அமைக்க அனுமதி தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வீடு உள்ளிட்ட கட்டடங்களில் 10 கிலோ வாட் வரை அமைக்க ஒப்புல் பெற வேண்டியது இல்லை. தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஒப்புதல் இல்லாமல் இதற்கான பணிகளை செய்ய முடியும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கூறி உள்ளது.

Read more ; தீபாவளிக்கு மளிகைப்பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு அறிவிப்பு..!! – என்னென்ன பொருட்கள் தெரியுமா ?

.

English Summary

No need to pay current bill anymore..! Tamil Nadu Electricity Board Super Notification

Next Post

ரொட்டி, வெண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் தீவிர பதபடுத்தப்பட்ட பிரிவில் சேர்ப்பு..!! - ICMR  எச்சரிக்கை

Sat Oct 26 , 2024
Do you have these 3 deadly things in your kitchen? ICMR has declared them unhealthy!

You May Like