fbpx

இனி எங்கும் அலைய தேவையில்லை..!! வீடு தேடி வரும் வங்கி சேவை..!! எப்படி பெறுவது..?

இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்கள் அனைவரும் வங்கிக்கு செல்லாமல் நேரடியாக வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக அனைத்தையும் முடித்து விடுகின்றனர். 24 மணி நேரமும் வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவைகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி, வங்கி சேவைகள் முகவர்கள் மூலமாக வீடு தேடி வந்தும் வழங்கப்படுகிறது. தற்போது பொதுத்துறை வங்கிகள் முதல் தனியார் துறை வங்கிகள் வரை டோர் ஸ்டேப் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.

இதன் மூலமாக வங்கி முகவர் வீட்டிற்கு வந்து கணக்கு தொடங்குதல், பணம் எடுத்தல் மற்றும் டெபாசிட் செய்தல் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகின்றன. இதில் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.75 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு வாடிக்கையாளர் நாளொன்றுக்கு ரூ.20 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுத்தல் மற்றும் இருப்பு வைத்தல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இந்த சேவை 70-க்கும் மேற்பட்ட மூத்த குடிமகன் மற்றும் மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதனைப் பெறுவதற்கு மொபைல் எண்ணை வங்கிக் கணக்குடன் பதிவு செய்திருக்க வேண்டும். வாடிக்கையாளரின் வீட்டில் இருந்து வங்கி கிளை 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

தமிழ்நாட்டில் இந்த 6 மாவட்ட மக்கள் இன்று உஷாராக இருங்கள்…..! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு…..!

Tue May 2 , 2023
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது. ஆகவே தமிழ்நாட்டில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில்தான் கோவை, நீலகிரி போன்ற 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. […]

You May Like