நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை இனி திருத்த இயலாது என பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில்; பார்வையில் கண்ட அரசாணையில் நம்பிக்கை இணையம் (BlockChain) என்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை திருத்த இயலாத நிரந்தர ஆவணங்களாக மாற்ற ஆணையிடப்பட்டுள்ளது. இந்த தொழில் நுட்பமானது மின்னணு மயமாக்கப்பட்ட ஆவணங்களை முத்திரையிடுவதை(time stamp) நோக்கமாகக் கொண்டு செயல்படுவதால் இதனை முன் தேதியிட்டு மாற்றவோ அல்லது திருத்தவோ இயலாது.
ஒளிவருடல் செய்யப்பட்ட ஆவணங்களின் ஒரு பகுதியை(file hashes) தனியாக பிரித்து எடுத்து சேமித்து வைப்பதன் வழி ஆவணங்களின் மெய்த்தன்மை எக்காலத்திலும் உறுதி செய்யப்படுகிறது. கால மேற்படி, அரசாணைக்கு இணங்க, இத்திட்டமானது 13.6.2023 தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.