fbpx

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளை முடக்க யாராலும் தடுக்க முடியாது : வானதி சீனிவாசன்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளை யாராலும் தடுக்க முடியாது என்று  பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு நடத்துவதற்கு  காவல்துறை அனுமதியளிக்கவில்லை . இதற்கு கண்டனம் தெரிவித்து  கோவை தெற்கு பா.ஜக. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

’’ உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும், மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த தமிழக காவல்துறை தடை விதித்துள்ளது.சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையிலான திமுக அரசின் நடவடிக்கைக்கு கண்டனத்திற்குரியது’’ என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடப்பது இது தான் முதன் முறை என்பது போல சில அரசியல் தலைவர்கள் பேசி வருகின்றனர். 1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அடுத்த சில ஆண்டுகளிலேயே தமிழகத்திலும் தொடங்கப்பட்டது.1940-ல் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையத்தில் தமிழகத்தில் இருந்து இரண்டு பேர் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர் என வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே, விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டும் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் என்பது அரசியலமைப்பு சட்டப்படி பதிவு செய்யப்பட்டு இயங்கும் ஜனநாயக இயக்கம். 97 ஆண்டுகள் நிறைவு செய்து 98வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. என தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சட்டப்படி இயங்கும் அமைப்புக்கு ஊர்வலம் நடத்த, பொதுகூட்டம் நடத்த உரிமை உள்ளது. இந்த அடிப்படை உரிமையை பறிப்பது ஜனநாயகத்தை முடக்கும் பாசிச நடவடிக்கை ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பில் தொண்டர்கள் சீருடை அணிந்து அனுமதிக்கப்பட்ட பாதையில் செல்வார்கள், அணிவகுப்பு முடியும் இடத்தில் பொதுகூட்டம் நடைபெறும். என தெரிவித்தார்.

இதுவரை ஆர்.எஸ்.எஸ்.ஆல் வன்முறை வந்ததில்லை: அணிவகுப்பில் எந்த ஒரு கோஷமும் போடமாட்டர்கள். இப்படி97 ஆண்டுகளாக நடந்து வரும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பில் எந்த ஒரு வன்முறையும் நடந்ததில்லை. ஆர்.எஸ்.எஸ் அரசியல் இயக்கம் அல்ல சமூக கலாச்சார, தேச பக்தி இயக்கம், தேசத்திற்காக தானாக முன்வந்து உழைக்கும் தன்னார்வலர்களை உருவாக்கும் அமைப்பு. இதனால் தான் உயர்நீதிமன்றத்திமும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளித்தது. உயர்நீதிமன்றம் விதித்த கட்டுபாடுகாளை முழுமையாக பின்பற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உறுதி அளித்துள்ளது.

காவல்துறை அனுமதிக்க வேண்டும் : இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது எந்த விதத்தில் நியாமல்ல. இது போன்ற இடையூறுகளை வைத்து தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளை முடக்கி விட  யாராலும் முடியாது.  ஆர்.எஸ்.எஸ் ஸை வீழ்த்துவதற்காக முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி முயற்சிகள் படுதோல்வியில் முடிந்ததை இந்து விரோத திமுக அரசுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன் என்றும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Next Post

லிஃப்ட் கேட்டு பைக்கில் ஏறிய மூதாட்டியை; பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது..!!

Thu Sep 29 , 2022
ஆலங்குடி அருகே எஸ்.களபம் கிராமத்தில் வசித்து வரும் அடைக்கலம் மகன் முருகானந்தம் (20). இவர் தனது பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மூதாட்டி(65) ஒருவர் அந்த வழியாக வீட்டிற்கு காய்கறிகளை வாங்கிக்கொண்டு வந்தார். அந்த மூதாட்டி முருகானந்தத்திடம் பைக்கில் லிப்ட் கேட்டு அவருடன் வந்து கொண்டிருந்தார். அப்போது கும்மங்களம் அருகே வந்தபோது அங்கிருக்கும் குளக்கரையில் வைத்து முருகானந்தம் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது மூதாட்டி சத்தம் […]

You May Like