fbpx

”நான் இருக்கும் வரை அதிமுகவை யாரும் அபகரிக்க முடியாது”..! சசிகலா ஆவேசம்

நான் இருக்கும் வரை வரை இந்த இயக்கத்தை யாரும் அபகரிக்கவோ, அழித்து விடவோ முடியாது என்று சசிகலா ஆவேசமாக பேசியுள்ளார்.

அண்ணா திராவிடர் கழகம் சசிகலாவுடன் இணைந்த விழாவில் சசிகலா பேசியதாவது, ”எம்.ஜி.ஆர். அனைவரையும் சரிசமமாகப் பார்ப்பார். வாழ்க்கையில் மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இருந்தது. எனவே, அனைவரையும் ஒன்றுபடுத்தி இயக்கத்தை வழிநடத்தினேன். நம் அனைவரின் எண்ணமும் மீண்டும் கழக ஆட்சியை அரியணையில் ஏற்றுவது மட்டும்தான். அனைவரையும் ஒன்று சேர்த்து தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி நம் கட்சியாக அதிமுகவைக் கொண்டு வர வேண்டும். பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைவரையும் ஒன்று சேர்த்து ஒருங்கிணைந்த அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகத்தை உருவாக்கும் வரை நான் ஓயமாட்டேன்.

”நான் இருக்கும் வரை அதிமுகவை யாரும் அபகரிக்க முடியாது”..! சசிகலா ஆவேசம்

மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட உண்மையான இயக்கம் அதிமுக. இந்த இயக்கம் இருக்கின்ற வரை தமிழர் வாழ்வு வளரச் செயல்படும். எனக்கு பின்னர் பல நூற்றாண்டுகள் மக்களுக்காக அதிமுக இயங்கும். அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக நின்றால் இயக்கம் பல நூற்றாண்டுகள் இயங்கும். அதிமுகவை தமிழக மக்கள் எப்படி பார்த்தார்கள். நம் இயக்கத்தில் நடந்த நிகழ்வு மிகவும் மனதிற்கு கவலை அளிக்கிறது. நம் தலைவர்கள் எப்படி கஷ்டப்பட்டார்கள்? இந்த இயக்கம் எப்படிப்பட்ட இயக்கம்? என்பதெல்லாம் மறந்துவிட்டு ஒரு சிலருடைய உண்மையான பொறுப்பு தனிப்பட்ட தேவைகளுக்கு நீ பெரியவன் நான் பெரியவன் என்று போட்டி போட்டுக் கொண்டு செயல்படுவதால் தற்போது அப்பாவி தொண்டர்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர்.

Income tax department attaches V K Sasikala's property worth Rs 15 Cr

அதிமுக வரலாற்றில் ஆண்டுக்கு ஒரு முறை கழக சட்டத் திட்டங்களை யாரும் மாற்றியதில்லை. இது மிகப்பெரிய கேளிக்கூத்தாக உள்ளது. சட்டப்படி இவர்கள் செய்வது செல்லாது. இதையெல்லாம் இப்படியே நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. நடந்தது பொதுக்குழு கூட்டம் அல்ல – வெறும் நிர்வாகிகள் கூட்டம் மட்டுமே. உண்மையான தொண்டர்கள் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள். எம்ஜிஆர் ஜெயலலிதாவின் பயிற்சிப் பட்டறையில் படித்தவளாக சொல்கிறேன். வீரத் தமிழச்சியாக சொல்கிறேன். நான் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாரும் அபகரிக்கவோ, அழித்து விடவோ முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

ஐநா தகவல்: அதிக மக்கள் தொகையில் இந்தியா சீனாவை மிஞ்ச வாய்ப்பு....!

Tue Jul 12 , 2022
ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய கணிப்புபடி, உலக மக்கள் தொகை 2030-ம் ஆண்டில் சுமார் 8.5 பில்லியனாகவும், 2050-ம் ஆண்டில் 9.7 பில்லியனாகவும் வளரக்கூடும் என்று கணக்கிட்டுள்ளது. மேலும், இது 2080 களில் சுமார் 10.4 பில்லியன் மக்கள் தொகையை கொண்டிருக்கும் என்றும், 2100 வரை அந்த நிலையில் இருக்கும் என்றும் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியது. உலக மக்கள்தொகை நாள் இன்று […]

You May Like