தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளின் அலுவலகம் மற்றும் முகாம் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியில் அமர்த்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வந்தவர் டி.மகேஷ்குமார். இவர், பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் காவலர், மகேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாரளித்திருந்தார். இதன் காரணமாக மகேஷ்குமார் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
மேலும், மகேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் காவல்துறையினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளின் அலுவலகம் மற்றும் முகாம் அலுவலகத்தில் பெண் காவலர்களை பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எஸ்பிகளில் இருந்து ஐஜி வரை உள்ள உயரதிகாரிகளின் அலுவலகங்கள் மற்றும் முகாம்களில் பெண் போலீசாரை பணியில் அமர்த்தக் கூடாது.
தற்போது பெண் போலீசார் இவ்வாறு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால், உடனே அவர்களை வேறு பணிக்கு மாற்ற வேண்டும். இதுதொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : குண்டு வெடிப்பில் சிக்கிய பேருந்து..!! 11 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாப பலி..!! பாகிஸ்தானில் பயங்கரம்..!!