உலகில் பல இடங்களில் இன்னும் விசித்திரமான பாரம்பரியம் பழக்கங்கள் பின்பற்றுகின்றன. அந்த வகையில். 90 வருடங்களாக வினோதமான பாரம்பரியத்தை பின்பற்றி வரும் உலகில் உள்ள ஒரு கிராமத்தை பற்றி பார்க்கலாம்..
பிரிட்டனில் உள்ள இந்த கிராமத்தில், மக்கள் பெரிய வீடுகளில் வாழ்ந்தாலும், ஆடையின்றி வாழ்கின்றனர். இந்த கிராமத்தின் தனித்துவ பாரம்பரியத்தை உலகெங்கிலும் இருந்து பலர் ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் எடுத்துள்ளனர். பிரிட்டனில் உள்ள Hertfordshire இல் அமைந்துள்ள Spielplatz என்ற கிராமத்தில் தான் இந்த விசித்திர முறை பின்பற்றப்படுகிறது.. இங்கு வசிப்பவர்கள் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளனர். நம்பிக்கை மற்றும் மரபுகளை பின்பற்றி அவர்கள் ஆடை அணிவதில்லை என்று கூறப்படுகிறது.. இந்த கிராமத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாரும் ஆடை அணிவதில்லை.
இந்த கிராமத்தில் அழகான வீடுகள், நீச்சல் குளங்கள் மற்றும் பீர் போன்றவையும் உள்ளன என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த கிராமத்தில் தபால்காரர் மற்றும் பல்பொருள் அங்காடியில் இருந்து பொருட்கள் விநியோகம் நடைபெறுகிறது.
ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் அமைந்துள்ள இந்த தனித்துவமான கிராமம் பிரிட்டனின் பழமையான காலனிகளில் ஒன்றாகும். இங்கு அழகான வீடுகள், நீச்சல் குளம் போன்ற அனைத்து அம்சங்களும் உள்ளன. இந்த தனித்துவமான கிராமத்தில் 93 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் இப்படித்தான் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு ஊடக அறிக்கையின்படி, இந்த சமூகம் 1929 ஆம் ஆண்டில் ஸ்பீல்ப்ளாட்ஸ் கிராமத்தில் வாழ்ந்த 85 வயதான ஐசெல்ட் ரிச்சர்ட்சனின் தந்தையால் நிறுவப்பட்டது.
Read more ; அங்கீகாரம் பெற்ற கட்சி..!! சீமான், திருமாவளவனுக்கு TVK தலைவர் விஜய் வாழ்த்து..!!