fbpx

“ ஈரோடு இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை..” பாமக அறிவிப்பு..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை என்று பாமக அறிவித்துள்ளது..

பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமகவின் உயர்மட்ட குழு கூடி விவாதித்தது.. இடைத்தேர்தல்கள் தேவையற்றவை.. மக்களின் வரிப்பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை.. அதனால் தான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் காலமானதாலோ அல்லது கட்சி தாவியதாலோ சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியானால், அங்கு இடைத்தேர்தல் நடத்த தேவையில்லை.. அங்கு பொதுத்தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றதோ அதே கட்சியை சேர்ந்த ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக்கிவிடலாம் என்பது பாமகவின் நிலைப்பாடு..

இதையே பாமக தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிடுவதில்லை, எந்த கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்று உயர்நிலைக்குழு கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது…

Maha

Next Post

தங்கையை காதலித்த இளைஞர்….! பெற்றோர்கள் கண்டித்ததால் தற்கொலை….!

Sat Jan 21 , 2023
அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரையில், பொதுவாக காதலுக்கு என்று ஒரு பெயர் இருக்கிறது அதாவது காதலுக்கு கண்ணில்லை என்று பலர் சொல்வதுண்டு. அதேபோல இந்த காதல் மட்டும் தான் ஜாதி, மதம், இனம், மொழி என்று எந்தவித பாகுபாடும் பார்க்காமல் மனதை மட்டுமே பார்த்து ஒருவரிடம் இன்னொருவரை மனதை பறி கொடுக்க வைக்கும். அதே புனிதமான காதலால் முறையற்ற நபர்களிடம் ஒருவர் மனதை பறி கொடுத்தால் என்ன […]

You May Like