நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, ரேஷன் கார்டு திட்டத்தில் அவ்வபோது பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ரேஷன் கார்டு திட்டத்தில் ஏற்படும் மோசடிகளை தடுக்க பொதுமக்கள் கட்டாயமாக தங்களின் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
மேலும், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பதற்கு வருகின்ற ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்கவில்லை என்றால் ஜூலை 1ஆம் தேதியிலிருந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இரண்டு மாதம் கால அவகாசம் இருப்பதால் உடனே அந்த வேலையை முடித்து விடுங்கள்.