fbpx

வங்கதேச இந்து துறவியின் ஜாமின் மனுவை பங்களாதேஷ் நீதிமன்றம் நிராகரித்தது..!!

இஸ்கான் அமைப்பின் முன்னாள் பாதிரியார் சின்மோய் கிருஷ்ண தாஸ் நவம்பர் 25ஆம் தேதி டாக்கா விமான நிலையத்தில் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவரின் ஜாமின் மனுவை பங்களாதேஷ் நீதிமன்றம் நிராகரித்தது.

வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தி, ரங்புர் என்ற இடத்தில் கடந்த மாதம் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வங்கதேச தேசிய கொடியை அவர் அவமதித்ததாக ‘இஸ்கான்’ எனப்படும் கிருஷ்ண பக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி, ‘சம்மிலிதா சனாதனி ஜக்ரன் ஜோதே’ என்ற அமைப்பின் செய்தித் தொடர்பாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவரது ஜாமின் மனு, கடந்த மாதம் 26ல் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் சாட்டோகிராம் நீதிமன்றத்தில் இன்று ( டிச.,12) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி சைய்புல் இஸ்லாம் மறுத்து ஜாமின் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார். ஜாமீன் மனு மீதான விசாரணை ஜனவரி 2ஆம் தேதி நடைபெறும் என்று சட்டோகிராம் பெருநகர அமர்வு நீதிபதி சைபுல் இஸ்லாம் தெரிவித்தார்.

Read more ; ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி.. புதுச்சேரி மக்களின் வங்கி கணக்கில் ரூ.5000 வரவு வைப்பு..!!

English Summary

No relief to Hindu priest: Bangladesh court rejects petition to advance hearing of Chinmoy Krishna Das’ bail plea

Next Post

ஏன் இவ்வளவு தாமதம்..? சசிகலா மீதான அந்நிய செலாவணி வழக்கு.. விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவு..!!

Thu Dec 12 , 2024
The Madras High Court has ordered the Egmore Economic Crime Court to expeditiously complete the investigation of the foreign exchange fraud case against Sasikala.

You May Like