fbpx

மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

மைக்ரோசாஃப்ட் கார்ப் இந்த ஆண்டு முழுநேர ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்போவதில்லை என்றும் போனஸ் மற்றும் ஸ்டாக் விருதுகளுக்கான பட்ஜெட்டையும் நிறுவனம் குறைக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. “கடந்த ஆண்டு, சந்தை நிலைமைகள் மற்றும் நிறுவனத்தின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இழப்பீட்டிற்காக குறிப்பிடத்தக்க அளவு முதலீடு செய்தோம். உலகளாவிய பட்ஜெட்டை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கினோம்” என்று சத்யா நாதெல்லா அனுப்பிய ஈமெயிலில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில், மைக்ரோசாப்ட் 10,000 தொழிலாளர்களைக் குறைப்பதாக கூறியது. பொருளாதார மந்தநிலையச் சமாளிக்க தொழில்நுட்பத் துறையில் பல நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மைக்ரோசாப்ட் இப்போது ஜெனரேட்டிவ் AI இல் தனது கவனத்தை செலுத்தியுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் நிறுவனத்தின் வளர்ச்சி பிரகாசமாக இருக்கும் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கருதுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து பில்லியன் கணக்கான டாலர்களை நிதியுதவியாகப் பெற்றுள்ள ChatGPT தயாரிப்பாளரான OpenAI உடன் இணைந்து, மைக்ரோசாப்ட் ஆபிஸ் (MS Office) தயாரிப்புகளிலும் பிங் (Bing) சர்ச் எஞ்சினிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் புகுத்தி வருகிறது.

Chella

Next Post

’நீ எப்படி குதிரையில் ஊர்வலம் போகலாம்’..!! பட்டியலின இளைஞர் மீது கொடூர தாக்குதல்..!! பெரும் பரபரப்பு..!!

Thu May 11 , 2023
டெல்லி அருகே ஆக்ரா பகுதியைச் சேர்ந்தவர் அஜய் ஜாதவ். இவருக்குக் கடந்த மே 4ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது மணமகனை அவரது உறவினர்கள் குதிரையில் அமரவைத்து ஊர்வலமாகக் கல்யாண மண்டபத்திற்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர். இவர்கள் சோஹல்லா ஜாவத் பஸ்தி நகர் பகுதி அருகே வந்த போது சிலர் இவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அவர்கள் ‘பட்டியலினத்தைச் சேர்ந்த நீ […]
’நீ எப்படி குதிரையில் ஊர்வலம் போகலாம்’..!! பட்டியலின இளைஞர் மீது கொடூர தாக்குதல்..!! பெரும் பரபரப்பு..!!

You May Like