”கோபாலபுர வீட்டைத் தாண்டி எந்த பெண்ணுக்கும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை” என்று அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “முதலமைச்சரால், ஒரு ஏர்ஷோவை கூட ஒழுங்கா நடத்தத் தெரியல. அத்தனை அப்பாவி மக்கள் உயிரிழந்திருக்காங்க. இவர் மணிப்பூர் பாலிடிக்ஸ் பத்தி பேசிட்டு இருக்காரு. பெங்களூர்ல ஏர்ஷோ நடக்குது. உதயநிதி ஸ்டாலினை அனுப்பி எப்படி நடத்துறாங்கனு பாத்துட்டு வர சொல்லுங்க. இவரு மணிப்பூர்ல நடந்ததைப் பத்தி பேசுறாரு. மணிப்பூர்ல நடந்ததைப் பத்தி என்ன பேசுனாலும் அவருக்குப் புரியாது.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கிறது. முதலமைச்சர் அவரோட வேலையை சரியா பாக்காம மணிப்பூர்ல அது நடக்குது. கும்பமேளாவுல இது நடக்குதுனு பேசிகிட்டு இருக்காரு. உள்ளூர், சொந்த மாநிலத்தில் நடப்பதை பற்றி ஏன் பேசவில்லை..? ஏடிஜி சுற்றறிக்கை வெளியிட்ருக்காரு. டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஒத்துக் கொள்கிறார். ஆனால், முதல்வர் ஏன் ஒத்துக்கொள்ளவில்லை..?
4 வருஷம் தூங்கிட்டு சீனியர் ஆபீசர் வீட்டுல ஆர்டர்லியா இருக்குற பெண் காவலரை ஸ்டேஷனுக்கு அனுப்புங்க. சிறப்பு நீதிமன்றம் என்ன பண்ணப்போறாங்க? அண்ணா பல்கலைக்கழகம் விவகாரம் என்ன ஆனதுனே தெரியல. அவங்க வீட்ல இருக்க பெண்கள் நல்லா இருக்காங்க. கோபாலபுர வீட்டைத் தாண்டி எந்த பெண்ணுக்கும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
Read More : ’தலித் மக்கள் மீதான சாதிய வன்கொடுமை’..!! ’ஒப்புக்கொள்ளுங்கள் முதல்வரே’..!! கொந்தளித்த பா.ரஞ்சித்