fbpx

’’அயோடைஸ்டு’’ அல்லாத உப்பு விற்பனை…. தடை செய்யப்பட்ட 13 டன் உப்பு பறிமுதல்..

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் ’’அயோடைஸ்டு.’’ அல்லாத 13 டன் உப்பு பறிமுதல் செய்யப்பட்டது.

கோயம்பேட்டில் வணிக வளாகத்தில் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகின்றது. இதில் அயோடைஸ்டு அல்லாத உப்பு விற்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. விற்கப்படும் பொருட்களின் தரம் குறித்து சோதனை செய்வதற்காக உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சதீஸ் வந்திருந்தார். உணவுப்பொருட்களில் கலப்படம் செய்யப்படுகின்றதா? தரமாக வழங்கப்படுகின்றதா? என்பது உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களின் தரம் குறித்து சோதனை செய்தார்.

இதே போல உப்பில் அயோடைஸ்டு அல்லாத உப்பு குறித்தும் சோதனை செய்தார். அப்போது மொத்த உப்பு விற்பனையகத்தில் உள்ள உப்பை சோதனை செய்தபோது அவை அயோடைஸ்டு உப்பு அல்ல என்பது தெரியவந்தது. அந்த கடையில் இருந்து பல்வேறு கடைகளுக்கு உப்பு அனுப்பப்படுகின்றது. இந்த உப்பு விற்பனை செய்ய தடை உள்ளது. இந்நிலையில்  தடை செய்யப்பட்ட உப்பு விற்கப்பட்டதால் அதிரடியாக 13 டன் உப்பு பறிமுதல் செய்தார்…

இது குறித்து சதீஸ் கூறுகையில் ’’அயோடின் போடப்பட்ட உப்பு உப்பளத்தில் இருந்தே கலவை செய்து பிற இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். மூட்டை மூட்டையாக வரும்போது தனித்தனி பாக்கெட்டுகளில் எவ்வளவு அயோடின் சேர்க்க வேண்டும் என்பதை பொருத்து விநியோகிக்கப்படுகின்றது.இன்று சோதனை செய்தபோது இங்கு அதிக அளவில் உப்பு மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தது. கேட்டால் , தொழில்துறைக்காக வைத்துள்ளோம் என தெரிவித்தார்கள். இது குறித்து அவர்களிடம் விசாரிக்கின்றோம். சந்தேகத்தின் அடிப்படையில் இங்குள்ள மூட்டைகளை பறிமுதல் செய்துள்ளோம். அவர் விநியோகம் செய்த உப்பு மூட்டைகள் எங்கெல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ரசீது கேட்டுள்ளோம். அந்தக் கடைகளிலும் நாங்கள் சோதனை செய்வோம். அயோடின் அல்லாத உப்பு பயன்படுத்தக்கூடாது. அவர் அந்த ரசீதையும் விளக்கத்தையும் கொடுத்தால் அவர்களிடம் ஒப்படைப்போம்… உப்பளத்தில இருந்தே 30 பி.பிஎம் போட்டு, கடைகளுக்கு 15 பி.பி.எம்.( அயோடின் அளவு) என்ற அளவில்இருக்க வேண்டும் வீடுகளுக்கு சென்றடையும்போதுஅந்த பாக்கெட்டில் 5 முதல் 10 பி.பி.எம். என்ற அளவில் இருக்க வேண்டும்.’’   மேலும் நம் உடலுக்கு ஒரு ஊசி முனையின் அளவிற்கு அயோடின் தேவைப்படுகின்றது. இது இல்லாததால் தைராய்டு போன்ற நோய்கள் ஏற்படுகின்றது. கர்ப்பிணிப்பெண்களுக்கு கழுத்தில் வீக்கம் ஏற்படுதல் ஹார்மோன் மாற்றம் ஏற்படுதல் போன்ற ஆபத்துகள் ஏற்படுகின்றது

Next Post

அபார சதத்தால் தரவரிசைப் பட்டியலில் முன்னேறிய விராட் கோலி..! எந்த இடம் தெரியுமா?

Wed Sep 14 , 2022
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்ததை அடுத்து, ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அபார சதம் விளாசிய விராட் கோலி, மீண்டும் ஃபார்ம்-க்கு திரும்பியுள்ளார். கோலியின் இந்த சதத்தால், தரவரிசைப் பட்டியலில் 14 இடங்கள் முன்னேறியுள்ளார். தற்போது ஐசிசி டி20 தரவரிசையில் விராட் கோலி 15-வது இடத்தை பிடித்துள்ளார். அதே நேரத்தில் ரோகித் சர்மா 14-வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் […]
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா இந்திய அணி..? இன்று கடைசி போட்டி..!

You May Like