fbpx

வடகிழக்கு பருவமழை..!! வேகமெடுக்கும் டெங்கு காய்ச்சல்..!! மக்களே உஷார்..!! சுகாதாரத்துறை அலெர்ட்..!!

டெங்கு தடுப்பு பணியை தீவிரப்படுத்த அரசு மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்த போதும், டெங்கு பரவலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால், ஏராளமான மக்கள், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், டெங்கு பரவலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு வார்டுகளையும், படுக்கைகளையும் தயாராக வைக்குமாறு அரசு மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் டெங்கு தடுப்பு கண்காணிப்பு பணிகளை முடுக்கிவிட வலியுறுத்தியுள்ள அவர், வீடுகள் தோறும் மருத்துவ கண்காணிப்பை முன்னெடுக்கவும், கொசு ஒழிப்பு பணிகளை கிராமங்கள், நகரங்களில் விரிவுபடுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

Chella

Next Post

’புருஷன், பொண்டாட்டியை மாத்தி இப்படி பண்றீங்களே’..!! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்..!!

Wed Oct 25 , 2023
தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக அறியப்பட்டவர் நடிகை சங்கீதா. இவர், ஒரு சில படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் கபடி கபடி படத்தில் பாண்டியராஜனுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். விக்ரமுக்கு ஜோடியாக பிதாமகன் படத்தில் நடித்தது தான், இவருக்கு பெரிய பெயரை பெற்றுத் தந்தது. வெற்றிலை பாக்கு வாயில் கெட்ட வார்த்தைகள் பேசும் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இவர், பிரபல பின்னணி பாடகர் கிரிஷ் என்பவரை […]

You May Like