fbpx

தமிழ்நாட்டில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை..!! கனமழை எச்சரிக்கை..!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டிற்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இந்த பருவமழையின் மூலமே தமிழ்நாடு அதிகளவில் மழையை பெரும். இந்நிலையில், தென் மேற்கு பருவமழை முற்றிலுமாக முடிவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கடந்தாண்டை விட 8% அதிகமாக தமிழ்நாடு மழையை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வரும் 23ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. இதனால், வடகிழக்கு பருவமழை நாளை தமிழகத்தில் தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை இன்றே தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Chella

Next Post

திருமணம் செய்து கொள்ளாமல் 10 ஆண்டுகள் உறவு..!! பாலியல் கருத்தால் பிரேக் அப் செய்த பிரதமர்..!!

Sat Oct 21 , 2023
இத்தாலிய நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி. இவர், ஜியாம்ப்ருனோ என்பவரை திருமணம் செய்துகொள்ளாமல் 10 ஆண்டுகளாக உறவில் இருந்து வந்தார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர், கடந்த வெள்ளிக்கிழமை தனது நீண்டகால காதலர் பத்திரிகையாளர் ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோவை பிரிந்ததாக அறிவித்தார். அவர் சமீபத்தில் தொலைக்காட்சியில் பாலியல் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டதால் ஜார்ஜியா இந்த முடிவை எடுத்துள்ளார். இந்நிலையில், அவர் இது குறித்து தனது எக்ஸ் […]

You May Like