fbpx

இம்மாத இறுதியில் ஆரம்பமாகிறது வடகிழக்கு பருவமழை!… தென் மாநிலங்களில் 112% வரை மழை பெய்ய வாய்ப்பு!

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் இந்தியத் தீபகற்பத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் என்றழைக்கப்படுகின்றது. பின் பருவமழைக் காலம் என்று அழைக்கப்படுவதும் இக்காலமே. தென்னிந்தியத் தீபகற்பத்தின் முக்கிய மழைக்காலம் இதுவே. குறிப்பாக கிழக்குப் பகுதியான கரையோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மழைப்பொழிவு சற்று அதிகமாக இருக்கும்.

இந்தநிலையில், இந்தாண்டு ஜூனில் துவங்கிய தென்மேற்கு பருவமழை விலகத் துவங்கியுள்ளது. வரும், 15ம் தேதி அளவில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பருவமழை ஓய்ந்து விடும்; இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்க்கு பருவமழை 94.4 % பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் எல்நினோவின் தாக்கம் பெரிதாக இல்லை என வானிலை மையம் கூறியுள்ளது. தொடர்ந்து வடகிழக்கு பருவமழை இயல்பு அல்லது இயல்புக்கு அதிகமாக பெய்யும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் தென்னிந்தியாவ்ல் இயல்பை விட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது. மேலும் தமிழ்நாடு, கடலோர ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் 88 % முதல் 112 % வரை வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2023-ம் ஆண்டு தென்மேற்கு பருவ மழை தமிழகத்தில் 8% அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜுன் 1 முதல் இன்று வரை தென்மேற்கு பருவமழை பெய்ய வேண்டிய 32 செ.மீ.க்கு பதில் 35 செ.மீ ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் இயல்பை விட 74 % அதிக மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Kokila

Next Post

955 உயிருள்ள கங்கை ஆமைகள் மீட்பு...! 6 பேரை கைது செய்த காவல்துறை...!

Mon Oct 2 , 2023
நாக்பூர், போபால் மற்றும் சென்னையில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த 955 உயிருள்ள அரியவகை கங்கை ஆமைகளுடன் 6 பேரை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) நேற்று கைது செய்தது. ஐ.யு.சி.என் சிவப்பு பட்டியல் மற்றும் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் அட்டவணை 1 மற்றும் 2 இன் கீழ் பாதிக்கப்படக்கூடிய / அருகிலுள்ள உயிரினங்களாக குறிப்பிடப்பட்டுள்ள அரிய வகை ‘கங்கையின் ஆமைகள்’ சட்டவிரோத கடத்தல் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள […]

You May Like