fbpx

புதுச்சேரியில் அடுத்தடுத்து நகை பறிப்பில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்……! அதிரடி கைது……!

புதுச்சேரி மேரி உழவர்கரை சிவசக்தி நகர் கடந்த 14ஆம் தேதி பணியை முடித்துவிட்டு வழுதாவூர் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மார்பக நபர்கள் அவர் அணிந்திருந்த 5 சவரன் தாலி சங்கிலியை 10 சென்றுள்ளனர்.

அதேபோல முதலியார் பேட்டை ஜெயமூர்த்தி நகரை சேர்ந்த ஸ்ரீவேணி(48) என்பவர் 100 அடி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது அவரிடம் இருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். அதேபோல அண்ணா சாலை மற்றும் மறைமலை அடிகள் சாலையில் நடந்து சென்ற 2 பெண்களிடமும் வகையில் பறித்து சென்றுள்ளனர் தொடர்ந்து பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் புதுவையில் நடைபெற்று வருவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான் இந்த நகை பருப்பில் ஈடுபட்ட நபர்களை கண்டுபிடிப்பதற்காக தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். நகை பறிப்பு குறித்து பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பார்வையிட்டு குற்றவாளிகளை அடையாளம் காண காவல்துறையினர் முயற்சித்தனர்.

அப்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திருபுவனையிலிருந்து ஒரு மோட்டார் சைக்கிளை திருடி சென்று கைவரிசியில் ஈடுபட்டார்கள் என்பது தெரிய வந்தது. அதோடு இந்த விசாரணையில் மராட்டியத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் முகமது ஜாபர், குருஷி(29) வாரிஸ் கான் (30) விழுப்புரத்தில் உள்ள அவர்களது உறவினர் ஒருவரின் வீட்டில் கடந்த சில தினங்களாக தங்கி இருந்தனர் என்பது தெரிய வந்தது. மேலும் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நகை பறிப்பில் இவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது.

இந்த நிலையில் தான் பிரம்பை சாலையில் தனி படை காவல்துறையினர் வாகன சோதனைகள் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த வாலிபரை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் அவர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் நகை படிப்பில் ஈடுபட்ட முகமது ஜாபர் குரேஷி என்பது தெரிய வந்தது. உடனடியாக அவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவருடைய நண்பரான வாரிஷ் கான் உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு தப்பிச்சென்றார் என்பது தெரிய வந்தது. அதோடு நகைகளை வெளிப்புறத்தில் உள்ள உறவினர் மூலமாக வேறொருவரிடம் விற்பனை செய்து இருப்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 8 பவுன் நகைகளை காவல்துறையினர் அமைத்தனர். இந்த வழக்கில் தப்பிச்சென்ற வாரிஷ் கானை பிடிப்பதற்காக தனி படை காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்

Next Post

30,000 ரூபாய்க்கு moto edge40 மாடல் மொபைல்….! சிறப்பம்சங்களின் முழு விவரம் இதோ…..!

Sat Jun 24 , 2023
30,000க்கும் குறைவான ஸ்மார்ட் போன் என்பது தற்போது அதிக விற்பனை என்று சொல்லப்படுகிறது. அத்துடன் ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்கள் பல்வேறு சிறந்த அம்சங்களை வழங்குவதாக உறுதியளிக்கும் விலை பிரிவாக உள்ளது. தற்சமயம் moto edge40 மாடல் தொடர்பாக நாம் தெரிந்து கொள்ளலாம். இது ஒப்பீட்டளவில் அதிக சிறப்பம்சங்களை கொண்ட மேலும் மலிவான விலையில் அதாவது 30 ஆயிரம் ரூபாயில் கிடைக்கிறது இந்த விலையில் கண்ணாடி பின்புறம் ஆனால் பிளாஸ்டிக் பிரேம் […]

You May Like