திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள தாடிக்கொம்பில் 65 வயது விவசாயியான ராயப்பனுக்கும் அவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் டேனியல் மற்றும் வின்சென்ட் வளர்த்து வந்த நாய்களுக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இதற்கிடையில், டேனியல் மற்றும் வின்சென்ட் ஆகியோரின் செல்ல நாய் வழிப்போக்கர்களை பார்த்து அடிக்கடி குறைத்தும், கடிப்பது போலவும் நடந்து கொண்டிருக்கிறது.
இதனை பற்றி பலமுறை ராயப்பனிடம் புகார் அளித்து வந்துள்ளார். ஒருநாள் ராயப்பன் பக்கத்து வீட்டு நாய்களை பெயர் சொல்லி அழைக்க மறுத்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தில், நாய்களைத் தாக்குவதற்காக ராயப்பன் குச்சியை தேடியுள்ளனர். இதனை பார்த்து ஆத்திரமடைந்த வின்சென்ட் மற்றும் டேனியல் அவரை தாக்கியுள்ளனர்.
தாக்கியதில் ராயப்பன் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டேனியல் மற்றும் வின்சென்ட் இருவரையும் தேடி வருகின்றனர்.