fbpx

எந்த நாட்டிலும் ஒரு அங்குல நிலம் கூட ஆக்கிரமிக்கவில்லை!… சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சு!

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்கா சென்றார். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ‘எங்களது அரசானது இன்றுவரை எந்தவொரு மோதலையும், போரையும் தூண்டவில்லை என்றும் எந்தவொரு நாட்டின் ஒரு அங்குலம் நிலத்தையும் கூட சீனா ஆக்கிரமித்ததில்லை’ என்றும் கூறினார்.

முன்னதாக ஜி ஜின்பிங்குடனான சந்திப்பின் போது, ​​சின்ஜியாங், திபெத், ஹாங்காங் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அவருடன் கவலையை பகிர்ந்து கொண்டார். இந்த சந்திப்புக்கு பிறகு இரு நாடுகளிலும் பதற்றம் குறையும் என நிபுணர்கள் கருதுகின்றனர். கடந்த 1962ம் ஆண்டு இந்தியா – சீனா இடையே நடந்த போரின் போது, இந்தியாவின் ‘அக்சாய் சின்’ பகுதியை சீனா ஆக்கிரமித்தது. அப்போது இருந்தே இந்திய – சீன எல்லை பிரச்னைகள் தொடர்கின்றன. இந்தநிலையில், எந்தவொரு நாட்டின் ஒரு அங்குல நிலத்தையும் சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் பேசியிருப்பது அரசியல் ரீதியாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Kokila

Next Post

செவிலியர்களுக்கு குட்நியூஸ்!… இன்னும் ஒருமாதத்தில் 5,000 பணியிடங்கள் நிரப்பப்படும்!… அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

Sat Nov 18 , 2023
தமிழகத்தில் ஒருமாத காலத்திற்குள் மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் என ஏறத்தாழ சுமார் 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு கையேட்டை வெளியிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், வலைதளத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவத்தின் எதிர்காலம் குறித்த மாநாடு தற்போது நடத்தப்பட இருக்கிறது. […]

You May Like