பொது நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள அரசாணைத் தீர்மானத்தில், அதிகாரிகள் தங்களைச் சந்திக்க வரும் மக்களிடமும், ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் குடிமக்கள் அல்லது அரசு அதிகாரிகளிடமிருந்து தொலைபேசி அல்லது மொபைல் போன் அழைப்புகளைப் பெறும்போது ‘ஹலோ’ என்பதற்குப் பதிலாக ‘வந்தே மாதரம்’ என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு அரசுத் தீர்மானத்தை வெளியிட்டது.
பொது நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில்; அதிகாரிகள், தங்களைச் சந்திக்க வரும் மக்களுக்கு, ‘வந்தே மாதரம்’ வாழ்த்துச் சொல்லைப் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த மாதம் சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, பாஜக ஆதரவுடன், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆட்சி அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.