தற்போது உள்ள காலகட்டத்தில், பலருக்கு இருக்கும் முக்கியமான வியாதி என்றால் அது தூக்கமின்மை தான். ஆம், ஓடி ஓடி உழைக்கிறேன் என்ற பெயரில் பலர் சரியாக தூங்குவதில்லை. தூக்கமின்மை இதய கோளாறு உள்ளிட்ட பல மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும், தூக்கமின்மை உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், பக்கவாதம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். ஆய்வின் படி, தூக்கமின்மை மன அழுத்ததை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது. சராசரியாக ஒரு மனிதன் ஒவ்வொரு இரவும் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும் என அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் வலியுறுத்துகிறது. ஆனால், ஒருவர் 7 மணி நேரத்திற்கு குறைவாக தூங்கும்போது உடல்நலக் குறைவுகள் ஏற்படும்.
இப்படி, தொடர்ந்து ஒருவர் சரியாக தூங்காமல் இருக்கும் பட்சத்தில் அவருக்கு இரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, இதய செயலிழப்பு, சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படும். மேலும், நாம் தூங்கும்போது நன்றாக தூங்குகிறோமா என்பதும் முக்கியம். ஏனென்றால், தூக்கத்தின் போது தான் நம் உடல் தன்னைத் தானே சரி செய்துகொள்ளும். ஆம், உங்கள் இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவுகள் தூக்கத்தின் போது ஒழுங்குபடுத்தப்படுகிறது. அதனால், கண்ட மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை விட நன்றாக தூங்குவது மேலானது.