இரண்டு இருசக்கர வாகனங்களுக்கு நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் கலபுரகி சேடம் தாலுகா ஹபாலா – தெல்கூர் சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் எதிர் எதிர் திசையில் வேகமாக வந்துள்ளன. அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் 2 இருசக்கர வாகனங்களிலும் வந்த 4 இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு, பரிதாபமாக சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கு வந்த போலீசார், 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், விபத்தில் இறந்தவர்கள் ஹபாலா கிராமத்தை சேர்ந்த சித்து கிஷன் (25), மல்லிகார்ஜன் (20), தெல்கூர் கிராமத்தில் வசித்து வந்த சுரேஷ் (20), பிரகாஷ் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர், தலைக்கவசம் அணியாமலும், அதிவேகமாகவும் பைக்கை ஓட்டி வந்ததால், விபத்துக்குள்ளாகி இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.