பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக இருப்பதை விட கொடுமையான சூழல் வேறு எதுவும் இருக்க முடியாது கேரள நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த 2021 ஆண்டில் 17வயது சிறுமியை, அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், மேலும், நிர்வாணப் படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிடப் போவதாக மிரட்டி 26 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு திருவனந்தபுரம் விரைவி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆஜ் சுதர்சன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கருப்பமாக்கியதாக 26 வயது இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் 86,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளிதார். மேலும், இந்தவழக்கில் பிறப்பித்த உத்தரவில், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக இருப்பதை விட கொடுமையான சூழல் வேறு எதுவும் இருக்க முடியாது என்று கூறினார்.
கற்பழிப்பு ஒரு தீய செயல். இது வன்முறைக் குற்றமாகும், இது வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளில் தெளிவாகக் காணப்படுகிறது. இது ஒரு மனிதனின் ஆழமான தனிப்பட்ட வாழ்க்கையின் அத்து மீறல், மற்றொரு நபர் மீது மிருகத்தனமான அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டை செலுத்துதல்,” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. கற்பழிப்பினால் ஏற்படும் கர்ப்பம் பாதிக்கப்பட்டவரின் வேதனையை கூட்டி வாழ் நாள் முழுவதும் நீடிக்கலாம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.