சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள நர்சிங் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி : B.sc Nursing,
பணி அனுபவம்; 2 வருடங்கள்,
வயது: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணியாளர்களுக்கு உணவு, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு செய்ய மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள பணியாளர்கள் www.omcmanpower.tn.gov.in கொள்ளலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் சுய விவர விண்ணப்பப்படிவம், பணி அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் (Passport) நகல், கல்வி சான்றிதழ் கட்டாயம். குறிப்பிட்டுள்ள ஆவணங்களை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு 18/02/2025 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நேர்காணல் விவரம் : நேர்காணல் வருகிற 23.02.2025 முதல் 26.02.2025 வரை கொச்சியில் நடைபெறவுள்ளது. இந்தப்பணிக்கு தேர்வுபெறும் பணியாளர்களிடமிருந்து சேவைக் கட்டணமாக ரூ.35,400/- மட்டும் வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்டுகளோ கிடையாது.விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொண்டு இந்நிறுவனத்தின் மூலம் பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம், தொலைபேசி எண்:044-22502267/044-22505886, மற்றும் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more : Weight loss : எளிதாக எடை குறைக்க, நடக்கும்போது இந்த டிப்ஸ் ஃபாலோவ் பண்ணுங்க..!!