fbpx

நெல்லை உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை அறிவிப்பு..!! யார் யாருக்கு எவ்வளவு..?

தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் கடுமையாக சிரமத்தை சந்தித்துள்ளனர். பெரும்பாலானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நிவாரணம் குறித்த விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய், சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 10,000 ரூபாய், 33 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஹேக்டருக்கு 17,000 ரூபாய், மானாவாரி பயிர் 8,000 ரூபாய் வழங்கப்படும்.

மேலும், பசு மற்றும் எருது உயிரிழப்புக்கு 37,500 ரூபாய், வெள்ளாடு மற்றும் செம்மறியாடு உயிரிழப்புக்கு ரூ.4,000 ரூபாய், முழுவதும் சேதமடைந்த கட்டுமானத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இனி கொலஸ்ட்ராலை ஈசியா குறைக்கலாம்..!! வந்தாச்சு தடுப்பூசி..!! புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு..!!

Fri Dec 22 , 2023
ஹார்ட் அட்டாக் அல்லது ஸ்டிரோக் போன்ற உயிர் அபாயத்தை ஏற்படுத்தும் நோய்களுக்கு அடிப்படையாக இருப்பது கெட்ட கொலஸ்ட்ரால் தான். இது நம்முடைய ரத்த நாளங்களில் படிவதால் தான் அடைப்பு ஏற்படுகிறது. ஆக, கொலஸ்ட்ரால் அளவுகள் மிக அதிகமாக இருந்தால், இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். உலக அளவில் இதயம் சார்ந்த நோய்களால் ஆண்டுதோறும் 18 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. இந்நிலையில், […]

You May Like