fbpx

அடிதூள்..‌ சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்களில் கண்காணிப்பு சாதனம் அவசியம்….! மத்திய அரசு…!

ஆபத்தான அல்லது அபாயகரமான சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்களின் இருப்பிட கண்காணிப்பு சாதனம் தொடர்பான அறிவிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது.

ஆர்கான், நைட்ரஜன், ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு வாயுக்கள் மற்றும் ஆபத்தான அல்லது அபாயகரமான சரக்குகளை ஏற்றி கொண்டு தேசிய அளவில் செல்லும் வாகனங்களில், வாகன இருப்பிட கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்படவில்லை என்று, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, ஆகஸ்ட் 3 2022 தேதியிட்ட பொதுசட்ட விதிகள் 617 (இ), மற்றும் என்2 மற்றும் என்3 ஆகிய பிரிவுகளின்கீழ், ஒவ்வொரு வாகனமும், செப்டம்பர் 1 2022 அல்லது அதற்கு பிறகும் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. புதிய மாடல்கள் விவகாரத்தில், ஜனவரி 1 2023 அன்று, ஏற்கனவே உள்ள வாகனங்களில் ஆபத்தான அல்லது அபாயகரமான சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்களில் AIS140-ன்படி, வாகன கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட்டிருக்கும்.

Vignesh

Next Post

ரத்து செய்யப்பட்ட பீட்சா ஆர்டருக்கு ரூ.10,000 அபராதம் செலுத்துமாறு Zomato-வுக்கு நீதிமன்றம் உத்தரவு....!

Wed Aug 24 , 2022
சேவையை வழங்குவதில் உள்ள குறைபாடு காரணமாக Zomato நிறுவனம் வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ.10,000 செலுத்த வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சண்டிகர் மாநில நுகர்வோர் ஆணையம், ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான Zomato “சேவையை வழங்குவதில் உள்ள குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்காக” வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூபாய் 10,000 மற்றும் இலவச உணவை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அஜய் ஷர்மா என்ற வாடிக்கையாளர் நுகர்வோர் மன்றத்தில் […]

You May Like