போக்குவரத்துத் துறையில் கார்பன் உமிழ்வைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன் படி, Gasoline-னுடன் எத்தனாலை கலப்பது, டீசல் வாகனங்களுக்கான எத்தனால் கலப்பு, பயோ டீசல், பயோ-சிஎன்ஜி, திரவமயமாக்கப்பட்ட இயற்கை வாயு, மெத்தனால், இரட்டை எரிபொருள், டி-மித்தேல் ஈதர், ஹைட்ரஜன் பேட்டரி வாகனம், ஹைட்ரஜன் சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களை அறிமுகப்படுத்தி உமிழ்வை மட்டுப்படுத்த இந்த அறிவிக்கை வகைசெய்யும்.
மேலும் மின்சார வாகனங்களை பயன்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மத்திய- மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள பழைய வாகனங்களை புதுப்பிப்பதை ரத்து செய்யும் அறிவிக்கையும் இதில் அடங்கும்.