fbpx

உலகின் மிக ஆபத்தான சிவப்புத் தேள் கடிக்கு புதிய சிகிச்சை…! மருந்தை கண்டுபிடித்த இந்தியா…!

இந்திய சிவப்புத் தேள் கடிக்கு மேம்பட்ட புதிய சிகிச்சை உருவாக்கபட்டுள்ளது.

உலகின் பல நாடுகளில் தேள் இனப்பெருக்கம் ஒரு கடுமையான பிரச்சினையாகும். இந்திய சிவப்புத் தேள் உலகின் மிகவும் ஆபத்தான தேள்களில் ஒன்றாகும். இந்திய சிவப்புத் தேள் விஷத்தால் தூண்டப்பட்ட நச்சுத்தன்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிகுறிகளைத் தடுப்பதற்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழுவும், குவஹாத்தியில் உள்ள தேஜ்பூர் பல்கலைக்கழக என்.ஐ.இ.எல்.ஐ.டி.யைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் குறைந்த அளவு வணிக ஏ.எஸ்.ஏ, ஏ.ஏ.ஏ மற்றும் வைட்டமின் சி கொண்ட புதிய சிகிச்சை மருந்து கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மருந்தின் செயல்திறன் முதலில் விலங்கு மாதிரிக்கு மாற்றாக நூற்புழு மாதிரியில் சோதிக்கப்பட்டது. இந்த ஆய்வு சமீபத்தில் டாக்ஸின்ஸ் இதழில் வெளியிடப்பட்டது. இந்தப் புதிய மருந்து உருவாக்கத்திற்குக் காப்புரிமையும் கோரப்பட்டுள்ளது.இந்தச் சிகிச்சை, தேள் கொட்டுவதற்கு எதிராக உலகெங்கிலும் கோடிக் கணக்கான நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும்.

Vignesh

Next Post

10ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு..!! விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Thu Nov 2 , 2023
10ஆம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் செயல் திட்ட தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மேலும், அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”ஏப்ரல் 2024, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத்தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்ய 10.08.2023 முதல் 21.08.2023 வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் பதிவு செய்ய விடுபட்டுள்ள மாணவர்களுக்கு தற்போது கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. தேர்வர்களின் நலன் கருதி […]

You May Like