fbpx

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 35% மதிப்பெண்…! வெளியான புதிய அரசாணை…!

10-ம் வகுப்பு விருப்பப் பாடத்திற்கு தேர்ச்சி மதிப்பெண்னை 35 % ஆக நிர்ணயித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில்; நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பகுதி 4-ல் விருப்ப மொழி பாடத் தேர்வில் மாணவர்கள் பெறும்மதிப்பெண்கள் தேர்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்படும். மேலும், பிற பாடங்கள்போல இதற்கும் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் (‘பாஸ் மார்க்’) 35 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மொத்தம் 6 பாடங்களில் பெறும் மதிப்பெண்கள், அவர்களது சான்றிதழில் குறிப்பிடப்படும். இந்த நடைமுறை வரும் 2024-25-ம் கல்வி ஆண்டில் இருந்து அமலுக்கு வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் விருப்ப மொழி பாடத்தை தேர்வு செய்தவர்களுக்கு மொத்த மதிப்பெண் 600 என்றும், தேர்வு செய்யாதவர்களுக்கு வழக்கம்போல 500 மதிப்பெண்ணும் கணக்கிடப்ப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Vignesh

Next Post

குபேர பகவானின் ஆசி பெற்ற பணமழை கொட்டப் போகும் அதிர்ஷ்ட ராசிகள்.! யார் தெரியுமா.!?

Sun Feb 18 , 2024
பொதுவாக குபேரர் செல்வத்தின் அதிபதியாகவே இருந்து வருகிறார். குபேரரின் ஆசிர்வாதம் ஒருவருக்கு இருந்தால் அவர்களுக்கு செல்வத்தில் எந்தவித குறையும் இருக்காது. நிறைவான வாழ்க்கையையும், செல்வத்தையும் பலருக்கும் அள்ளி கொடுக்க கூடியவர் தான் குபேரன். இதன்படி கிரகங்களின் மாற்றத்தால் குபேர பகவானின் ஆசியைப் பெற்று ஒரு சில ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகிறது. ஒவ்வொரு ராசியினருக்கும் ஒரு கிரகங்கள் அதிபதியாக துணை நிற்கும். அந்த துணை நிற்கும் கிரகங்களினால் ராசியினருக்கு […]

You May Like