இனி கலைஞரின் ’வருமுன் காப்போம்’ திட்டத்தில் இந்த பரிசோதனையும் சேர்ப்பு..! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கலைஞரின் ’வருமுன் காப்போம்’ திட்டத்தில் கண்புரை பரிசோதனை சேர்க்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் கண் அறுவை சிகிச்சை தொடர்பான 2 நாள் கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. கருத்தரங்கில் தலைமைச் செயலரும், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவக் குழுமத் தலைவருமான அமர் அகர்வால் தலைமை வகித்தார். பொருளாளரும், ராஜன் கண் மருத்துவமனை தலைவருமான மோகன்ராஜன், அறிவியல் குழுத் தலைவர் மஹிபால் எஸ்.சச்தேவ், அகில இந்திய கண் மருத்துவவியல் சங்கத்தின் அறிவியல் குழுத் தலைவர் லலித் வர்மா, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கண் மருத்துவவியல் துறை மருத்துவர் நம்ரதா ஷர்மா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.

இனி கலைஞரின் ’வருமுன் காப்போம்’ திட்டத்தில் இந்த பரிசோதனையும் சேர்ப்பு..! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கருத்தரங்கை தொடங்கி வைத்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ”இந்தியாவில் கண் பாதிப்புகள் அதிகம் காணப்படுகின்றன. பார்வைத் திறன் பாதிப்புள்ள நபர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிப்பது கவலைக்குரியது. ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால், பெரும்பாலான கண் பிரச்சனைகள் மற்றும் பார்வை இழப்புகளைத் தடுக்க முடியும். கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் இந்த ஆண்டில் இதுவரை 460 முகாம்கள் நடைபெற்றுள்ளன. இனி நடைபெறும் முகாம்களில், ஏழைகள் பயன்பெறும் வகையில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் கண்புரை பரிசோதனையும் சேர்க்கப்படும். கண்புரை இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு, கண் மருத்துவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்”. இவ்வாறு அவர் கூறினார்.

Chella

Next Post

மத்திய வேலை... BEL நிறுவனத்தில் BE Mechanical Engineering முடித்த நபர்களுக்கு வேலை….! உடனே விண்ணப்பிக்கவும்… முழு விவரம்

Sun Jul 10 , 2022
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Associate Consultant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் BE Mechanical Engineering […]

You May Like