கோடை காலம் துவங்கிவிட்டதால், கடும் வெப்பமும், புழுக்கமும் அதிகரித்து வருகிறது. எனவே, வீடுகளில் AC, Air Cooler அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஏர் கூலருடன் ஒப்பிடும்போது AC-க்கு செலவு அதிகம். காரணம், அது அதிக மின்சாரத்தை உறிஞ்சுகிறது. எனவே கரண்ட் பில்லும் அதிகமாகவே வருகிறது. AC-யை இரவெல்லாம் ஓடினாலும், கரண்ட் பில் குறைவாக ஒரு சில டிப்ஸ்களை கையாள வேண்டும் என்கிறார்கள்.
மனித உடலுக்கு தேவையானது வெப்பநிலை 24 டிகிரி என்பதால், வெப்பநிலையை 24 ஆகவே வைத்திருக்க வேண்டும். இதனால் கரண்ட் பில் மிச்சமாகும். ACயை பொறுத்தவரை, ஒவ்வொரு டிகிரி வெப்பநிலையை அதிகரிக்கும்போதும், 6 சதவீதம் மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதேபோல, ACயை சர்வீஸ் செய்தே பயன்படுத்த வேண்டும். இதனாலும் கரண்ட் பில் மிச்சமாகும். ACயின் பில்டரை 15 நாட்களுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்வதும் மின்சாரத்தை மிச்சப்படுத்தும். காரணம், ஏர் பில்டர்களில் தூசி சேரும்போதும் அதன் கூலிங் திறன் குறைந்துவிடும்.
ACயை பயன்படுத்தும்போது, ரூம் கதவு, ஜன்னல்கள் மூடியே இருக்க வேண்டும். அதாவது அனல் காற்று உள்ளே வராமல் பார்த்து கொண்டாலே போதும். இதனாலும் கரண்ட் பில் மிச்சமாகும். ACயை ஆன் செய்யும் போது, ரூமிலிருக்கும் சீலிங் ஃபேனையும் ஆன் செய்ய வேண்டும். AC + ஃபேன் ஒன்றாக சேர்த்து இயக்கினால் குளிர்ந்த காற்று ரூமின் மூலையை வேகமாக சென்றடையும். இதனாலும் கரண்ட் பில் மிச்சமாகும்.
ACயை ஆன் செய்யும் போது, கண்டிப்பாக அதன் டைமரை செட் செய்ய வேண்டும். ரூம் குளிர்ந்ததுமே, ஏசி தானாகவே அணைந்து விடும். இதனாலும் கரண்ட் பில் மிச்சமாகும். அதாவது, AC கருவியை 25இல் இருந்து 27 டிகிரி செல்சியஸ் வைத்து பயன்படுத்த வேண்டும் என்று மின்சார வாரியம் கூட தெரிவித்துள்ளது. அதேபோல், மோட்டர் பம்ப் ஏசி உள்ளிட்டவற்றை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.