மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான “QR CODE” மென்பொருள் செயலியை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான “QR CODE” மென்பொருள் செயலியை தொடங்கி வைத்து, ஈரக்கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்திற்கு ‘செழிப்பு’ என பெயரிட்டு விற்பனைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.
வேளாண் விளைபொருட்களுக்கு தமிழ்நாடு இயற்கை வேளாணமை சான்றிதழ் துறை (TNOCD) வழங்கும் அங்கீகாரம், இப்போது கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு , மீன் வளர்ப்பு, காளான் வளர்ப்பு மற்றும் பாலி கிரீன்ஹவுஸ் உற்பத்திக்கும் விரிவுபடுத்தப்படும் என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.