fbpx

இனி ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கும் ஜிஎஸ்டி வரி..? அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு..!!

இந்தியாவில் இணைய வழி பணப் பரிவர்த்தனைகள் அதிகமாகி வரும் நிலையில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படலாம் என தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2016இல் பழைய 500 மற்றும் 1,000 ரூபாயை செல்லாது என்று அறிவித்தது. பிறகு மொத்த பணமும் வங்கியில் செலுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில், சிஎன்பிசி-டிவி 18 ஊடகம் வெளியிட்ட தகவலின்படி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ.2,000 வரையிலான சிறிய டிஜிட்டல் பரிவர்த்தனை பேமெண்ட்களுக்கு விதிக்கப்படும் 2% சர்வீஸ் சார்ஜ்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்க கவுன்சில் பரிசீலிக்கப்படும் வாய்ப்புள்ளது.

வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. பேமெண்ட் அக்ரெகேட்டர்கள் என்று அழைக்கப்படும் ஏர்டெல் பே, 1பே, அமேசான் பே, சிசி அவின்யூ, டிஜிகோ, ஜொமேட்டோ உள்ளிட்ட பல்வேறு ‘பேமெண்ட் கேட்வே நிறுவனங்கள்’ வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆன்லைன் கட்டணங்களை ஏற்றுக் கொள்ளும் வணிகத்தை செய்கின்றன.

இவற்றிற்கு அந்தந்த நிறுவனங்கள் வசூலிக்கும் 1.5 முதல் 2 சதவீதம் சர்வீஸ் சார்ஜ்களுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த நிறுவனங்கள் மத்திய, மாநில வருவாய் அதிகாரிகளை உள்ளடக்கிய ஜிஎஸ்டி பொருத்துதல் குழுவின் கூட்டத்திற்கு பிறகு புதிய வரியை எதிர்கொள்ளக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சிலின் 54-வது கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Read More : லொள்ளு சபாவிடம் ரூ.10 லட்சம் ஏமாற்றிய தயாரிப்பாளர்..!! அந்த பணத்தை வைத்துதான் டிபனே சாப்பிடுவேன்..!!

English Summary

As online transactions are increasing in India, the information that GST may be imposed on digital transactions has caused a shock.

Chella

Next Post

உயில் எழுதி வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா..? தந்தை சொத்தில் மகளுக்கு உரிமை உண்டா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Mon Sep 9 , 2024
Earned assets will be bequeathed. But can native assets be bequeathed? If the father does not write a will, does the daughter have a right to the property? What does the law say? Let's see that in this post.

You May Like