பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தலைவராக இருந்த நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான காயத்ரி ரகுராமை கடந்த சில நாட்களுக்கு முன் பதிவில் இருந்து நீக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார் காயத்ரி ரகுராம், மேலும் தன்னுடைய தலைவர் மோடி தான் என்றும், அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுக்களை வைத்து பேட்டியும் கொடுத்தார்.
இந்த நிலையில் காயத்ரி ரகுராம் இருந்த பதவியை இசையமைப்பாளர் தினாவுக்கு வழங்குவதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி ” பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் பிரிவின் மாநில தலைவராக பிரபல இசையமைப்பாளர் தினா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இதன் துணை தலைவராக ஆனந்த் மெய்யாசாமி என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார்” என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.