fbpx

பெண்களுக்கு குட்நியூஸ்… வீட்டில் இருந்தே வட்டி பெறலாம்… சிறுசேமிப்பு திட்டத்தை அறிவித்த மத்திய அரசு!

பெண்கள் மற்றும் சிறுமிகள் பெயரில் 2 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யும் வகையில் மகிளா சம்மன் பச்சத் பத்ரா என்ற புதிய சிறுசேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகையில் 67.7% பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்திருந்தது. அந்தவகையில், பெண்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு மத்திய-மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தற்போது, பெண்களுக்கு மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் (Mahila Samman Savings Certificate) என்ற புதிய சிறு சேமிப்பு திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, பெண்களின் நிதி சுதந்திரம் உள்ளிட்ட கடந்த கால சாதனைகள் குறித்து பேசிய நிதியமைச்சர், கிராமப்புற பெண்களை அணிதிரட்டுவதற்காக தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NRLM) வெற்றியை சுட்டிக்காட்டினார். கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் நாட்டில் 80 லட்சத்துக்கும் அதிகமான சுயஉதவிக் குழுக்கள் உள்ளன என்றும் பொருளாதார வலுவூட்டலின் அடுத்த கட்டத்தை எட்டுவதற்கு, இந்த வரவு செலவுத் திட்டம் உதவும் என்றும் கூறினார்.

மேலும், நகர்ப்புற பெண்கள் முதல் கிராமப்புற பெண்கள் வரை, எங்கள் பெண் சக்தியின் வாழ்க்கையை மேம்படுத்த உழைத்து வருவதாக கூறிய நிர்மலா சீதாராமன், இந்த மகிளா சம்மன் பச்சத் பத்ரா திட்டத்தில், பெண்கள் மற்றும் சிறுமிகள் பெயரில் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம் என்றும், இந்த வைப்புத் தொகைக்கு சுமார் 7.5% நிலையான வட்டி விகிதம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். ஒரு முறை மட்டும் முதலீடு செய்யும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சிறு சேமிப்பு திட்டம், 2025 மார்ச் மாதம் வரை இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த திட்டத்தில் உள்ள தொகையில், பாதி தொகையை எடுத்துக்கொள்வதற்கான வசதியும் இருக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Kokila

Next Post

இந்த இயந்திரத்தை தயாரிப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு... விருப்பமுள்ளவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு!

Wed Feb 8 , 2023
பனை மரம் ஏறும் வகையில் சிறந்த இயந்திரத்தை தயாரித்து தருவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு தொட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தின் மாநில மரமாக விளங்கிவரும் பனை மரத்தின் சாகுபடி மற்றும், பனை மரங்களை நம்பி வாழும் வேளாண் பெருமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், நடப்பு 2022-23 ஆம் ஆண்டிலும், பனை […]

You May Like