fbpx

இனி வட மாநில குழந்தைகளுக்கும் தமிழ் மொழி…! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு…!

தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் பயிலும் வட மாநிலத்தவர்கள் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை பயிற்றுவிக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு. வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும், அவ்வாறு சேர்ந்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை, பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்த வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; வடமாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து தமிழ் மொழியை படிக்க வைப்பதாகவும்,மாணவர்கள் விரும்பி படித்து நன்கு புலமை பெற்றுள்ளதாகவும், வடமாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழ்மொழியை பயிற்றுவிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பணிபுரிந்து வாழும் வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்குமாறும்,அவ்வாறு சேர்ந்து கல்வி பயிலும் மாணவர்கள் அரசு நடத்தும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால் உதவி தொகை பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்துமாறும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Now Tamil language is also available to children in the northern states…! School Education Department orders action

Vignesh

Next Post

இரட்டை இலை வழக்கில் திடீர் திருப்பம்..!! மனுதாரருக்கு என்ன ஆச்சு..? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!!

Mon Jan 20 , 2025
The Supreme Court has dismissed the appeal petition regarding the two-leaves symbol.

You May Like