fbpx

இனி திமுக கூடாரம் காலியாகும்… ஆர்.பி. உதயகுமார் பேச்சு..!

சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் தாதகாப்பட்டி பகுதியில் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்;-

அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்வதற்காக போராடினாலும், 7.5 சதவித உள்ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வகையில் வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி. 2011 முன்பு முதியோர் உதவித்தொகை 1200 கோடி  வழங்கினார்கள். அனால் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா 4500 கோடி ரூபாய் வழங்கினார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது ஐந்து லட்சம் பேருக்கு முதியோர் உதவிதொகை வழங்க உத்தரவிட்டார். அதிமுக ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிகணினி கொடுக்கப்பட்டது. ஆனால் இவற்றை எல்லாம் நிறுத்தியது திமுக அரசு.

திமுகவில் ஜனநாயகம் இல்லை. அதனால்தான் தற்போது சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறி இருக்கிறார். அடுத்தடுத்து ஒவ்வொருவராக திமுகவிலிருந்து வெளியேற இருக்கின்றனர். அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் சிறந்த காவல்துறையாக இருந்த தமிழக காவல்துறை, தற்போது சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் வகையில் இருக்கிறது. திராவிட முன்னேற்ற கழக அரசை விமர்சித்தால் சோதனை நடத்துகின்றனர். எத்தனை வழக்குகள் போட்டாலும் சட்டப்படி எதிர்கொள்வோம்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மனித புனிதரால் தொடங்கப்பட்ட, தெய்வசக்தி பெற்ற இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா, எடப்பாடியாரை வழிநடத்துகிறது. திமுகவிடமிருந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டுமென்றால் எடப்பாடியாரால்தான் முடியும். மத்திய அரசிடம் இருந்து எத்தனை அழுத்தம் இருந்தாலும் மின்கட்டணத்தை உயர்த்தி ஏழைமக்களுக்கு சுமை கொடுக்க கூடாது என்று எடப்பாடியார் கவனமுடன் இருந்தார். சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் இரட்டை இலைதான் வெற்றிபெறும் என ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Baskar

Next Post

புரோட்டீன் பவுடர் சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு.. அதீத பயன்பாடு ஆபத்தானது.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

Wed Sep 21 , 2022
கர்நாடகாவில் புரோட்டீன் பவுடர் சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், மருத்துவர்கள் இதுகுறித்து எச்சரித்துள்ளனர்.. புரோட்டீன் பவுடரை சாப்பிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், உடற்பயிற்சி ஆர்வலர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பு இயக்கத்தை தொடங்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது கர்நாடகாவில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்எல்ஏ சதீஷ் ரெட்டி, தனது தொகுதியில் புரோட்டீன் பவுடரை உட்கொண்டதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக […]

You May Like