சில ஓடிடி தளங்கள் வருடாந்திர வாடகையை உயர்த்தியுள்ள நிலையில் அமேசான் பிரைம் புதிய வசதியை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
அமேசான் பிரைம் வீடியோ பிரபலமான ஓ.டி.டி தளமாகும். பல்வேறு மொழி படங்கள், சீரிஸ் எனப் பல அதில் உள்ளன. பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாதம் அல்லது 1 ஆண்டுக்கு சப்ஸ்கிரைப் செய்து பிரைம் வீடியோக்களை பார்க்கலாம். ஏராளமானவர்கள் அமேசான் பிரைம் தளத்தை பயன்படுத்துகின்றனர்.
பல்வேறு ஓடிடி தளங்கள் வருடாந்திர கட்டணத்தை பல மடங்கு உயர்த்திவிட்டது. அதே நேரத்தில் இரண்டு, மூன்று பேர் ஒரே நேரத்தில் ஒரே கணக்கை பயன்படுத்தி பார்க்கலாம் என வைத்திருந்த திட்டத்தையும் திடீரென குறைத்து விட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அமேசான் ஆண்டுக்கு ரூ.599 திட்டத்தை வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டத்தில் டிவியிலோ, கணினியிலோ வீடியோக்களை பார்க்க முடியாது. பலரும் செல்போனில் படம் பார்ப்பதால் அவர்களுக்கு இத்திட்டம் உதவியாக இருக்கும். ஆண்டுக்கு ரூ.599 என்றால் நாள் ஒன்றுக்கு ரூ.1.84 காசுகள் ஆகின்றது. இது பட்ஜெட் திட்டமாகவும் இருக்கும். கல்லூரி அல்லது பேச்லர்களுக்கு ஏதுவான திட்டமாகவும் இருக்கம் என்ற காரணத்தினால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தைப் பெற உங்கள் போனில் அமேசான் பிரைம் வீடியோ டவுன்லோடு செய்து, திட்டத்தை தேர்ந்தெடுத்து பெறலாம். அல்லது PrimeVideo.com என்ற இணையதளப் பக்கத்தில் திட்டத்தை தேர்ந்தெடுத்து கட்டணம் செலுத்தி பயன்பெறலாம்.