இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ நேற்று தனது வாட்ஸ்அப் வங்கி சேவைகளை அறிமுகப்படுத்தியது, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி சில வங்கிச் சேவைகளைப் பெறலாம். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எஸ்பிஐ “உங்கள் வங்கி இப்போது வாட்ஸ்அப்பில் உள்ளது. உங்கள் கணக்கு இருப்பை அறிந்து கொள்ளுங்கள் .. மேலும் பயணத்தின்போது மினி ஸ்டேட்மென்ட்டைப் பாருங்கள்” என்று தெரிவித்துள்ளது.. எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி மூலம் இந்த சேவையைப் பெற, வாடிக்கையாளர்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும்.
வாட்ஸ் பேங்கிங் முறையை எப்படி தொடங்கு வது..?
- 7208933148 என்ற எண்ணிற்கு WAREG என்று டைப் செய்து ஸ்பேஸ் விட்டு, உங்கள் கணக்கு எண்ணை டைப் செய்து SMS அனுப்பவும்.
- உங்கள் SBI கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள அதே தொலைபேசி எண்ணிலிருந்து இந்த SMS அனுப்ப வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..
- எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங்கில் பதிவுசெய்த பிறகு, எஸ்பிஐயின் 90226 90226 என்ற எண்ணிலிருந்து ஒரு செய்தி உங்கள் வாட்ஸ்அப் போனுக்கு அனுப்பப்படும்.
- இப்போது 9022690226 என்ற எண்ணில் ‘Hi’ SBI என டைப் செய்து அனுப்பவும்.. பின்னர் எஸ்பிஐ தரப்பில் இருந்து பதில் அனுப்பப்படும்.
- கணக்கு இருப்பைச் சரிபார்க்க உங்களுக்குத் தேவையான விருப்பங்களை தேர்வு செய்யவும்.
- உங்களின் கடைசி ஐந்து பரிவர்த்தனைகளின் மினி ஸ்டேட்மெண்டை பெறவும். எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங்கிலிருந்து நீங்கள் பதிவு நீக்க விரும்பினால், வாடிக்கையாளர்கள் 3வது விருப்பத்தைத் தேர்வுசெய்யலாம்.
- உங்கள் கணக்கு இருப்பு அல்லது மினி ஸ்டேட்மெண்ட் உங்கள் விருப்பப்படி காட்டப்படும்.