fbpx

இனி, தெரியாத எண்களில் இருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகளை Mute செய்யலாம்.. விரைவில் புதிய அப்டேட்..

உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது..

’இனி Whatsapp-க்கு பேக்கப் தேவையில்லை’..!! வந்தாச்சு புதிய அப்டேட்..!! அனைத்து டேட்டாக்களும் இனி உங்கள் கையில்..!!

அதன்படி, தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை Mute செய்வதற்கான புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.. வாட்ஸ்அப்-ஐ கண்காணிக்கும் இணையதளமான WABetaInfo இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” வாட்ஸ் அப் ஒரு புதிய அம்சத்தை உருவாக்குகிறது.. தெரியாத எண்களில் இருந்து அழைப்பு வந்தால் அதை Silent Mode-ல் வைக்கும் புதிய அம்சம் அறிமுகமாக உள்ளது..

இந்த புதிய அம்சம் பயனர்கள் ஸ்பேம் அழைப்புகளை கணிசமாக குறைக்க உதவும்.. சமீபத்திய ஆண்டுகளில், ஸ்பேம் அழைப்புகள் மூலம் நடைபெறும் மோசடி மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.. தற்போது, வாட்ஸ்அப் இந்த மோசடி அழைப்புகளை தடுப்பதற்கும் புகாரளிப்பதற்கும் ஒரு புதிய விருப்பத்தை வழங்குகிறது.. இது மேம்படுத்தப்பட்ட ஒரு அம்சமாகும், மேலும் இந்த அம்சம் வாட்ஸ் அப்-ன் எதிர்கால அப்டேட்டில் வெளியிடப்படும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

இதை இப்படியே விடக்கூடாது...! கடுமையான நடவடிக்கை எடுங்க...! முதல்வருக்கு ஓபிஎஸ் கோரிக்கை...!

Mon Mar 6 , 2023
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் பிற மாநிலத் தொழிலாளர்கள் காலம் காலமாக பல்வேறு பணிகளில், குறிப்பாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கு, தமிழ்நாட்டின் கட்டமைப்பிற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை, அவர்கள் இங்கு விரட்டி அடிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியிருப்பது வருத்தமளிக்கும் […]

You May Like