fbpx

தமிழகமே.. இனி ஆன்லைன் மூலம் மரக்கன்றுகளை ஆர்டர் செய்யலாம்…! தமிழக அரசு அறிவிப்பு…!

தமிழகத்தில்‌ வணப்பரப்பை அதிகப்படுத்தி, பசுமைப்‌ போர்வையை விரிவுபடுத்தும்‌ வகையில்‌ பசுமை தமிழ்நாடு இயக்கம்‌ முதலமைச்சர்‌ அவர்களால்‌ கடந்த 24.09.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழக வணம்‌ மற்றும்‌ பசுமைப்‌ பரப்பினை 33சதவீதமாக உயர்த்துததனை முக்கிய நோக்கமாகக்‌ கொண்டு இவ்வியக்கம்‌ தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும்‌ பல்வேறு இடங்களில்‌ மரம்‌ வளர்ப்பிற்கு, ஊக்குவித்தல்‌ இவ்வியக்கத்தின்‌ நோக்கமாகும்‌.

அதனடிப்படையில்‌, வேளாண்‌ பெருமக்கள்‌, தொழில்‌ நிறுவனங்கள்‌. மக்கள்‌ நலச்‌சங்கங்கள்‌, இயற்கை ஆர்வலர்கள்‌ மற்றும்‌ தணி நபர்கள்‌ மரக்கன்றுகளை எளிதாகப்‌ பெறும்‌ பொருட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்‌ இணையதள முகவரியில்‌ www greentnmission.com பயன்பாட்டாளர்கள்‌ தங்களது சுய விபரங்களை பதிவு செய்து, தங்களுக்கு தேவையான மரக்கன்றுகளை பெற்றுக்‌ கொள்ளலாம்‌. வேளாண்‌ பெருமக்கள்‌, மரக்கன்றுகளை நடுவதற்கு தங்களுக்குச்‌ சொந்தமான நிலங்கள்‌ பற்றிய விவரங்களுடன்‌ தங்களுக்குத்‌ தேவைப்படும்‌ மரக்கன்றுகளை இணைய தளம்‌ மூலமாகவோ அல்லது கடிதத்தின்‌ வாயிலாக இயக்குநர்‌, பசுமை தமிழ்நாடு இயக்கம்‌, பனகல்‌ மாளிகை, 8வது தளம்‌, சைதாப்பேட்டை, சென்னை.600 015 என்கிற இவ்வலுவலக முகவரிக்கு அனுப்பி வைத்து பெற்றுக்‌ கொள்ளலாம்‌.

Vignesh

Next Post

சர்ச்சையில் சிக்கிய மெய்டன் நிறுவனத்தின் இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்..!! சுகாதாரத்துறை அறிவிப்பு

Thu Oct 13 , 2022
சர்ச்சையில் சிக்கிய மெய்டன் நிறுவனத்தின் இருமல் மருந்துகள் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஹரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மெய்டன் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்து ஏற்றுமதி செய்த இருமல் மருந்துகளை உட்கொண்டதால் காம்பியா நாட்டில் குழந்தைகள் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இதையடுத்து, சோனிபட் நகரில் மெய்டன் பார்மாவுக்கு சொந்தமான ஆலையில் ஆய்வு நடத்திய பின் இருமல் மருந்துகள் உற்பத்தியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட […]
சர்ச்சையில் சிக்கிய மெய்டன் நிறுவனத்தின் இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்..!! சுகாதாரத்துறை அறிவிப்பு

You May Like