இன்றைய டிஜிட்டல் உலகில் நாளுக்கு நாள் புதுவகையான மோசடிகள் அரங்கேறி வருகிறது. தொலைதொடர்பு சாதனைகள் பயன்படுத்தி மோசடி செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில், அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், இனி சிம் வாங்க வேண்டும் என்றால் கட்டாயம் சில விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தொலைத்தொடர்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது, டெலிகாம் ஆபரேட்டர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்பாக அனைத்து செல்போன் சிம் விற்பனை நிலையங்களையும் பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் டீலர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். செப்டம்பர் 30-க்கு மேல் வாடிக்கையாளர்கள் விவரங்களை பதிவு செய்யாமல் சிம் கார்டு விற்கும் ஒவ்வொரு டீலருக்கும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
இதுவரை பதிவுகள் இல்லாமல் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ள அனைத்து இணைப்புகளையும் மறு சரிபார்ப்பு செய்ய வேண்டும். டீலர்கள் தங்களை ரிஜிஸ்டர் செய்து கொள்ள CIN நம்பர், LLPIN நம்பர், ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் வரி பதிவு சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். சான்றுகளும் சரிபார்க்கப்பட்டு போலி சான்றுகளை சமர்ப்பித்த பிறகு சிம் வாங்கியவர்களின் இணைப்பை ரத்து செய்தல் மற்றும் நடவடிக்கை எடுத்தல் குறித்து வழிகாட்டுதல்களும் வெளியாகி உள்ளது. இந்த விதிமுறைகள் அனைத்தும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.