fbpx

Election | “சின்னத்தை மாற்றுகிறார்கள்”… நாம் தமிழர் கட்சி பரபரப்பு புகார்.!

Election: வாக்குப்பதிவு இயந்திரத்தில் தங்களது சின்னத்தை மாற்றி ஒட்டுவதாக நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் பரபரப்பான புகார் அளித்திருக்கிறது.

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவு நாள் நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் தங்களது தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. மேலும் நாம் தமிழர் கட்சியின் கோட்பாடுகளின் படி 20 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் என 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளுக்கும் முன்பாக நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது

மேலும் அந்தக் கட்சி தனது தேர்தல் பரப்புரையையும் தொடங்கியது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தை முடக்கியது. மேலும் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இது அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தங்களது கட்சியை ஆளும் வர்க்கம் முடக்க நினைப்பதாக சீமான் பரபரப்பான குற்றச்சாட்டை பதிவு செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னமாக மைக் வழங்கப்பட்டது. நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்ட மைக் சின்னத்தையும் மாற்றுவதாக தேர்தல் ஆணையத்திடம் வந்த கட்சி சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு ஸ்விட்ச் இல்லாத மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கிறது ஆனால் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒட்டப்படும் வயிற்றினத்தில் ஸ்விட்ச் இருக்கிறது. இதுபோன்று தங்களது சின்னத்தை மாற்றி ஒட்டுவதாக தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Read More: “மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனமே மாறும்” – எச்சரித்த நிர்மலா சீதாராமனின் கணவர்..!

Next Post

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பெங்களூரு மெட்ரோ நிர்வாகம்..!! – பயணியின் ஆடை மீது விமர்சனம்!

Wed Apr 10 , 2024
சட்டையின் மேல் பட்டன் போடாமல் வந்த நபரை ரயில் ஏறவிடாமல் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அலுவலர் தடுத்து நிறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது பெங்களூருவின் தொட்டகல்லாசந்திரா மெட்ரோ ரயில் நிலையம் வந்த இளைஞனை ரயில் ஏற விடாமல் மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவரது சட்டை மேல் பட்டன்களை மாட்டச் சொல்லியும், மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் சுத்தமான ஆடைகளுடன் வரவேண்டும் என்றும், அழுக்கான ஆடையணிந்து வந்தால் ரயில் நிலையத்துக்குள் […]

You May Like