“மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனமே மாறும்” – எச்சரித்த நிர்மலா சீதாராமனின் கணவர்..!

2024 மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ‘அரசியல் சாசனமே மாறும்’ என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் எச்சரித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் பேசிய வீடியோவை காங்கிரஸ் தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடைபெறாது. மேலும், பாஜக ஆட்சியில் அமர்ந்தால் இந்தியாவின் வரைபடம் மாறும். மணிப்பூர், லடாக் பிரச்னைபோல நாடெங்கும் நடைபெறும். இந்தியா தேர்தலையே மறந்துவிட வேண்டியதுதான். ‘இனி பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்’ என்பது போன்ற வெறுப்புப் பேச்சுகளை மோடியே செங்கோட்டையில் இருந்து பேசுவார். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குக்கி மற்றும் மெய்டீஸ் இன மக்களுக்கு இடையிலான மோதல்களால் மணிப்பூரில் ஏற்பட்ட அமைதியின்மை இந்தியா முழுவதும் வழக்கமானதாக மாறிவிடும்” என அதில் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசில் அங்கம் வகிக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர், இப்படி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக, “தேர்தல் பத்திர ஊழல் இந்தியாவில் மட்டும் அல்ல, உலகிலேயே மிகப்பெரிய ஊழல்” எனக் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது

Next Post

Election | "சின்னத்தை மாற்றுகிறார்கள்"… நாம் தமிழர் கட்சி பரபரப்பு புகார்.!

Wed Apr 10 , 2024
Election: வாக்குப்பதிவு இயந்திரத்தில் தங்களது சின்னத்தை மாற்றி ஒட்டுவதாக நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் பரபரப்பான புகார் அளித்திருக்கிறது. 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவு நாள் நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் […]

You May Like